August 16, 2010


பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
2009 - 2010 ஆம் ஆண்டுக்கான செயலறிக்கை


1.   முன்னுரை
1.1. பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2009 - 2010 ஆம் ஆண்டுகளுக்கான  செயலறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

2.  செயலவைக் கூட்டங்கள்
2.1 செயலவைக் கூட்டங்கள் நான்கு (4) நடைபெற்றன.

3.  உறுப்பினர்கள்
3.1 ஆயுள்கால உறுப்பினர்கள் 31 பேர்கள். ஆண்டுச் சந்தா உறுப்பினர்கள் 58 பேர்கள். ஆக மொத்தம் 89 உறுப்பினர்கள்.

4.  புரவலர்கள்
4.1 மதிப்புமிகு டத்தோஸ்ரீ ச. சாமிவேலு SPMP., SSAP., SPMJ.,  PCM.,  PNBS., AMN அவர்கள்;   மதிப்புமிகு டத்தோஸ்ரீ கோ.இராஜு DPMO., PMP., KMN., PPT., PJK., JP அவர்கள்

5.  சட்ட ஆலோசகர்கள்
5.1 வழக்கறிஞர் மு.தங்கவேலு PJK அவர்கள்; வழக்கறிஞர் அமுசு பெ.விவேகானந்தன் அவர்கள்

6.  தமிழர் திருநாள்
6.1  ஈப்போ தமிழர் திருநாள் விழாவில் தலைவர், துணைச் செயலாளர்,    செயலவை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

7.  நூல் அறிமுகம்
7.1 சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினரும், நல்ல இலக்கியவாதியுமான அமரர் சங்கநதி பெரியார் திரு.அமுசு பெரியசாமி அவர்களின் துணைவியாரும், சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினரும், வழக்கறிஞருமான திரு. அமுசு.பெ.விவேகானந்தன் அவர்களின் தாயாருமான திருவாட்டி.மாரியாயி பெரியசாமி அவர்கள் எழுதிய ‘சிந்தனை முத்துக்கள்’ எனும் நூல் அறிமுக விழாவில் தலைவர், செயலாளர் உட்பட செயலவை உறுப்பினர்களான திரு.பூ. அருணாசலம், திரு.க.லோகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சுங்கை சிப்புட் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரு.பூ.அருணாசலம், திரு.சித.நாராயணன் இருவரும் உரையாற்றினர்.

8.  விருந்து

8.1 ஈப்போ பொன் பாவலர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் உட்பட செயலவை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர். பொன் பாவலர் மன்றக் கட்டட நிதிக்கு ரிங்கிட் 500.00 வழங்குவதாக நமது சங்கத்தின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

9.  மாநில அரசு மானியம்
9.1 பேரா மாநில அரசு வளாகத்தில் அமைந்துள்ள செர்பாகுணா மண்டபத்தில் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கான, மாநில அரசு மான்யம் வழங்கிய நிகழ்ச்சியில் தலைவர், செயலாளர், பொருளாளர் கலந்து கொண்டனர். இதில் ’வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டின் போது மதிப்புமிகு டத்தோ எஸ்.வீரசிங்கம் அவர்கள் சங்கத்திற்கு மான்யம் வழங்குவதாகக் கூறி 10,000.00 ரிங்கிட்டுக்கான காசோலையை மாண்புமிகு மாநில முதல்வர் வழங்கினார்.

10. ’வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீடு
10.1 நூல் வெளியீட்டு விழா ஈப்போவில் ஒரு பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்றது. மதிப்புமிகு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் நூலினை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். திரு.அமுசு பெ விவேகானந்தன் 5000.00 ரிங்கிட் கொடுத்து முதல் நூல் பெற்றார். மதிப்புமிகு டத்தோஸ்ரீ அவர்கள் 20,000.00 வழங்குவதாக வாக்குறுதி தந்து முன்பண்மாக 2000.00 ரிங்கிட் ரொக்கமாக வழங்கினார். டத்தோ வீரசிங்கம் அவர்களும் டத்தோ கோ.இராஜு அவர்களும் தலா 10,000.00 ரிங்கிட் வழங்குவதாக ஒப்புதல் தந்தனர்.  இந்த நிகழ்ச்சியின் மூலமாக 58,764.00 மலேசிய ரிங்கிட் திரட்டப் பட்டது. (ரொக்கம், காசோலை, வாக்குறுதி)

11.  ஐம்பெருங்காப்பியம்
11.1 ஈப்போவில் பேரா மாநில அரசு வளாகத்தில் அமைந்துள்ள பேங்குவிட் மண்டபத்தில் நடைபெற்ற ‘ஐம்பெருங்காப்பியம்’ இலக்கிய விழாவில் தலைவர், செயலவை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

12.  உலகச் செம்மொழி மாநாடு
12.1 தமிழ் நாடு கோவை மாநகரத்தில் கடந்த ஜூன் திங்கள் 23 ஆம் தொடங்கி 26 ஆம் நாள் வரை உலகச் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இதில் நமது சங்கத்தின் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். நமது சங்க உறுப்பினர் சிறுகதைச் சிற்பி ஏ.பி.மருதழகன் அவர்கள் ‘வான்புகழ் வள்ளுவரும், வையம்புகழ் கலைஞரும்’ எனும் தலைப்பில் கட்டுரை படைத்தார்.

13.  SPM கல்வி
13.1 எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்ப் பாடமும் தமிழ் இலக்கியப் பாடமும் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற சமுதாயத்தின் கோரிக்கையை நமது சங்கமும் வலியுறுத்தி மலேசியத் தலைமை கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

14.  இந்திய ஆய்வியல் துறை
14.1  இந்திய ஆய்வியல் துறைக்கு தமிழறிஞரையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற சமுதாயத்தின் வேண்டுகோளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் எழுதியதுடன், பத்திரிகைச் செய்தியும் விடுத்தது.

15.  அரசு சார்பற்ற இயக்க மாநாடு
15.1 அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆலோசனை உருங்கிணைப்பு மாநாடு சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. மதிப்புமிகு டத்தோஸ்ரீ தலைமையில் மாநில முதல்வர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். நமது சங்கச் செயலாளர் முக்கியப் பொறுப்பேற்று செயல்பட்டார்.

16..வள்ளலார் அன்பு நிலையம் திறப்பு விழா
16.1 ஈப்போ புந்தோங்கில் நடைபெற்ற வள்ளலார் அன்பு நிலையத்தின் திறப்பு விழா நமது சங்கத் துணைத் தலைவர் தமிழ்ச்சீலர் மா.செ.மாயத்தேவன் PPT., PJK அவர்கள் கலந்து கொண்டதுடன், பேரா மாநில ம.இ.கா  தலைவர் மதிப்புமிகு டத்தோ எஸ்.வீரசிங்கம் அவர்களுடன் இணைந்து அதிகாரப்பூர்வமாக கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார். இத்திறப்பு விழாவில் நமது சங்கத்தின் பலர் பங்கு பற்றிச் சிறப்பித்துள்ளார்கள்.

17. வாழ்த்துகள்

சங்கநதி எழுத்தாளரும்,  சங்க செய்லவை உறுப்பினருமான திரு.பூ.அருணாசலம் அவர்கள், எழுத்துலகில் நீண்ட காலமாக எழுத்துப் பணியாற்றி வருவதால், மலேசிய நண்பன் நாளிதழ், அன்னாரைப் பாராட்டிப் பெருமை சேர்த்தமைக்காக, சங்கம் பூவண்ணாவை வாழ்த்துகிறது.

18. இரங்கல்

மலேசிய முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், நமது சங்கத்தின் செயலவை உறுப்பினராகப் பணியாற்றியவருமான எழுத்தாளர் இரா.சிவஞானம் அவர்களின் மறைவுக்காகவும், பத்திரிகை ஆசிரியரும், நாடறிந்த எழுத்தாளரும், பேச்சாளரும், கவிஞரும், நமது சங்கத்தில் செயலவை உறுப்பினராகவும், துணைச் செயலாளராகவும் பணியாற்றிய கவிஞர் முரு.சொ.நாச்சியப்பன் அவர்களின் மறைவுக்காகவும் இரு குடும்பத்தினருக்கும் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டது.

19. நன்றி

சங்கத்தின் எல்லா நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்து வந்துள்ள செயலவையினருக்கும், சங்கத்தின் திட்டங்கள் வெற்றி பெற பேருதவியாக இருந்து வரும் நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சினிய நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.

சங்கக் கட்டட நிதிக்காக அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் ‘வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, நூலினை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டு உதவிய மதிப்புமிகு டத்தோஸ்ரீ அவர்களுக்கும், வாழ்த்துரைகள் வழங்கிய மதிப்புமிகு டத்தோ கோ.இராஜு, மதிப்புமிகு டத்தோ எஸ்.வீரசிங்கம் ஆகியோருக்கும், நூல்கள் வாங்கி ஆதரவு நல்கிய இலக்கிய ஆர்வலர்களுக்கும், சங்கச் செய்திகளை வெளியிட்டு ஆதரவளித்த நேசன், நண்பன், ஓசை பத்திரிகைகளுக்கும் நன்றி பாராட்டுகிறோம்.

சங்கத்தின் இலக்கியப் பணி நிலைபெறவும், சங்கக் கட்டடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறவும் உங்களின் நிலைத்த ஆதரவு வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

அன்புடன்,


சித.நாராயணன்
செயலாளன்